தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்தவர் கைது! - one arrested

நாமக்கல்: வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நிலத்தில் புதைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், அதன் உரிமையாளர் தங்கராசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு துப்பாக்கி

By

Published : Jun 6, 2019, 11:00 AM IST

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பை பகுதியில் தங்கராசு என்பவர் நாட்டுத் துப்பாக்கி வைத்து இருப்பதாக ஒருங்கிணந்த நுண்ணறிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரிடம் விசாரணை செய்ததில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த தங்கராசு

இது தொடர்பாக நடந்த விசாரணையில், விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர் துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, துப்பாக்கியைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், தங்கராசுவை கைது செய்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details