தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 9, 2022, 10:51 PM IST

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: திமுகவைச் சேர்ந்த கணவர், மனைவி போட்டியின்றித் தேர்வு!

பாண்டமங்கலம் பேரூராட்சியில், 7வது வார்டில் சிவகாமி என்பவரும்; 10ஆவது வார்டில் சுகந்தி என்பவரும் 14வது வார்டில் முருகன் என்பவரும் 15ஆவது வார்டில் சோமசேகர் என்பவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

கணவர் மனைவி போட்டியின்றி தேர்வு
கணவர் மனைவி போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளுக்கும் வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிகட்ட பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில் 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 7ஆவது வார்டில் சிவகாமி என்பவரும் 10ஆவது வார்டில் சுகந்தி என்பவரும் 14ஆவது வார்டில் முருகன் என்பவரும் 15ஆவது வார்டில் சோமசேகர் என்பவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

கணவரும் மனைவியும் வெற்றி

இதில் 15ஆவது வார்டு சோமசேகரும் 10ஆவது வார்டு சுகந்தியும் கணவர், மனைவி ஆவார். சோமசேகர் 1996 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல் 2006இல் நடைபெற்ற தேர்தலில் சுகந்தி வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

சோமசேகரின் சொத்து மதிப்பு 1 கோடியே 45லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும்; சுகந்தியின் சொத்து மதிப்பு 2 கோடியே 94லட்சத்து 63 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது என தங்களது வேட்புமனு தாக்கலின்போது சொத்து மதிப்பினை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்களூருவில் ஓய்வுபெற்ற தமிழ் விமானி, அவரது மனைவி ஆகிய இருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை!

ABOUT THE AUTHOR

...view details