இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு சேவை புரியும் இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு மூடுவதை தவிர்க்க வேண்டும். இவை ஊழியர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப செலுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை 18 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும்.
யூனியன் ஆஃப் ஐடி & ஐ.டி.இ.எஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்! - யூனியன் ஆஃப் ஐடி & ஐடி இஎஸ் எம்பிளாயிஸ்
நாமக்கல்: இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு மூடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆஃப் ஐடி & ஐ.டி.இ.எஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இ-சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு சான்றிதழ் அச்சிட்டு தர பேப்பர், டோனர் போன்றவற்றை பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் சபரீஸ் தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளர் முருகேசன், சிஐடியூ மாவட்ட தலைவர் சிங்காரம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.