நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சின்னஅரியாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாண்டியன் (40). அரசு மதுபானக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றும் இவருக்கு தங்கம் என்ற மனைவியும், சுவேதா (17) என்ற மகளும், சரண்(16) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதிய சுவேதாக காணாமல் போயுள்ளார்.
இது குறித்து, நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில்பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
அதில், 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தனது மகள் நீட் தேர்வு எழுதிவிட்டு நேற்று தேர்வு வினாவை வைத்துக்கொண்டு அதற்கான விடையை (ஆன்சர் கீ) செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அன்று காலை 10.40 மணி போல், இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாக தன்னிடம் கூறிவிட்டச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.