தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காந்தி வேடமணிந்த வேட்பாளர்! - காந்திய வேட்பாளர்

நாமக்கல்: சார் ஆட்சியர் அலுவலகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியின் போது அகிம்சா சோஷிலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ், தன்னை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்ட காந்தி வேடமணிந்த வேட்பாளர்!

By

Published : Apr 10, 2019, 6:09 PM IST

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் மக்களவை தேர்தலுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அகிம்சா சோஷிலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு காலை ஒன்பது மணியளவில் வந்தடைந்தார்.

நீண்ட நேரமாகியும் தேர்தல் அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சார் ஆட்சியர் அலுவலக முன்பு அவர் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் தான் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே நீண்ட நேரமாக காத்திருக்க வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

பின்னர் நாமக்கல் வட்டாட்சியர் சுப்பிரமணி அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின் அங்கிருந்து அவர் சென்றார். இதனால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணாவில் ஈடுபட்ட காந்தி வேடமணிந்த வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details