நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பட்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் அதே பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் அவரது மகன் கிருஷ்ணன் ஆகிய இருவரும் குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக நீரில்அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத் துறை வீரர் மோகனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மோகன், இறையமங்கலம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆற்றில் கயிறு கூட இல்லாமல் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.
உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மோகனோடு இணைந்து தந்தையையும், மகனையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் செயலை வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபி காந்திராஜன் தலைமையிலான உயரதிகாரிகள் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதைதொடர்ந்து சேலத்தை சேர்ந்த லதா ரஜினிகாந்தின் குழந்தைகளை காப்போம் இயக்கத்தின் சார்பில் ( PEACE FOR CHIDDRAN ) சேலம் மாநகர் பொறுப்பாளர் ஸ்ரீவாராஹி, குமரேசன், பழனிவேலு ஆகியோர் தலைமையில்10-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.