நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வரதன்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன், இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு அதிக அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்துள்ளனர்.
வங்கி மேலாளர் வீட்டில் தீ விபத்து
நாமக்கல்: ராசிபுரம் அருகே வங்கி மேலாளர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது.
Bank manager at Namakkal
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்க்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனபெட்டி, தொலைக்காட்சி, லேப்டாப், ஏசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்தது.
மேலும் தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.