மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார். இப்போட்டிகளை, தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகம், நாமக்கல் மாவட்ட வாள் விளையாட்டுக் கழகம், தனியார் கல்லூரிகள் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில் 18 மாவட்டங்களிலிருந்து வாள் விளையாட்டு வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான 10ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டி - மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்: மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10-ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார்.
10, 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில், சேபர்(Sabre), எப்பி(Epee), ஃபாயில்(Foil) ஆகிய மூன்று விதமான வாள் விளையாட்டுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது.
இப்போட்டிகளில், அதிக புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 6, 7, 8ஆம் தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான வாள் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட இருக்கிறார்கள்.