தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

35 ஆண்டுகளாக காத்திருப்பு - மின் இணைப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

நாமக்கல்: விவசாயத்திற்கு மும்முனை இணைப்பு கேட்டு 35 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Farmers request for power supply for 35 years
Farmers request for power supply for 35 years

By

Published : Feb 29, 2020, 8:32 AM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது பிரச்னைகள் குறித்துப் பேசினர்.

கோரிக்கைகள் பின்வருமாறு:

விவசாய பயன்பாட்டிற்கு தட்கல் திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்கும் திட்டம் அமலானது முதல், 35 ஆண்டுகளாக விவசாய பயன்பாட்டுக்கு மும்முனை மின் இணைப்புக்குப் பதிவுசெய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாத நிலை உள்ளது.

இதனால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பதிவு மூப்பின் அடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளதுபோல் மரவள்ளிக் கிழங்கை ஜவ்வரிசியாக மாற்றும் வகையில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலையை நாமக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

35 ஆண்டுகளாக காத்திருப்பு- மின் இணைப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

இதற்குப் பதில் அளித்த ஆட்சியர், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வந்துள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:இன்பினிட்டி பார்க்' - மாற்றுத்திறனாளி சிறுவர்களின் உலகம்!

For All Latest Updates

TAGGED:

power supply

ABOUT THE AUTHOR

...view details