நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் அடுத்த கல்யாணி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், " கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே பிரதானத் தொழிலாக விளங்கி வருகிறது. ஆனால், சேலத்தைச் சேர்ந்த சின்னுசாமி, வாசுதேவன் ஆகியோர் எங்கள் கிராமத்தில் 'ராசி லூம்ஸ் கிளெஸ்டர்' என்ற பெயரில் சாய ஆலை அமைக்க முயற்சித்து வருகிறார்கள்.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு இதற்கு அனுமதி அளித்தால் சாயப் பட்டறைகளிலிருந்து வெளியேறும், சாய கழிவுநீர் நிலத்தடி நீரை மாசு படுத்துவதோடு, சுற்று வட்டாரக் கிராமங்களின் வாழ்வாதரமான விவசாயத்தை அழித்துவிடும் சூழல் உருவாகிவிடும். எனவே, தங்கள் கிராமத்தில் சாய ஆலை அமைக்க அனுமதி தரக்கூடாது" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் ஊரில் சாயப் பட்டறை அமைக்கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சாய ஆலை திறப்பதைத் தடுக்கவே மனு அளித்துள்ளோம்" என்றனர்.
இதையும் படிங்க:ஆர்மி பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு!