தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிக்காக அனைத்து அரசு ஊழியர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம் - நாடாளுமன்றத் தேர்தல்
நாமக்கல்: நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிக்கும் இயந்திரங்களை நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 1,773 வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைப்பெற்றது.
இந்த இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைத்து அந்தந்த வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.