இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதவாது,
- 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட கனரக வாகனங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ( எப்.சி ) புதுப்பித்தல்.
- புதிய கனரக வாகனங்களை பதிவு செய்யும் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் முறை.
- விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு வரும் 13ஆம் தேதி முதல் இ- சலான் மூலம் அபராதம் செலுத்தும் திட்டம்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
இது போன்ற திட்டங்களை மிகவிரைவில் செயல்பாட்டுக்கு வரும். கடந்த ஆறு மாதங்களில் மேற்கொண்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சாலை விபத்துகள் கடந்தாண்டை காட்டிலும் 15% குறைந்துள்ளது. நகர்புறங்களில் 90% பேர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுகின்றனர். இதேபோல் கிராமப்புற இருச்சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.
விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும், விபத்துகள் அதிகம் ஏற்படும் செங்கல்பட்டு - திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தானியங்கி வேகக்கட்டுபாட்டு இயந்திரத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிப்பதற்கு சோதனை நடைபெற்று வருவகிறது. இதேபோல் தமிழகத்தில் அதிக விபத்து நிகழும் ஐந்து நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 825 மின்கலன் பேருந்துகள், இரண்டு ஆயிரம் மின்சார பேருந்துகளும் படிப்படியாக இயக்கப்படும் என தெரிவிதார்.