தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முட்டை விலை சரிவு! - namakkal

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ 3.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முட்டை விலை சரிவு!

By

Published : Apr 22, 2019, 5:37 PM IST

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முட்டை விலை ரூ 3.65 என இருந்தது. தற்போது தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ 3.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டே நாள்களில் முட்டையின் கொள்முதல் விலை 30 காசுகள் சரிவைச் சந்தித்திருப்பது கோழிப் பண்ணையாளர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை விலை சரிவு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், "வெயிலின் கடுமையான தாக்கத்தால் முட்டை நுகர்வு குறைந்து விலை வேகமாக சரிவடைகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் சத்துணவுக்கு முட்டை அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைால் தமிழ்நாட்டில் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விற்பனை சரிவை சந்தித்துள்ளது" என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details