தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி நாமக்கல்லில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே முட்டையின் விலை அடிக்கடி ஏற்றம்-இறக்கம் கண்டுவருகிறது. இந்நிலையில், இன்று முட்டை கொள்முதல் விலை 15 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 4.20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை 'திடீர்' உயர்வு! - 15 பைசா உயர்வு
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 15 பைசா உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முட்டை விலை உயர்வு
அதன் அடிப்படையில், நகரங்களில் முட்டை எவ்வளவு விற்பனையாகிறது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சென்னை - நான்கு ரூபாய் 30 பைசா,
- ஹைதராபாத் - மூன்று ரூபாய் 75 பைசா,
- விஜயவாடா - மூன்று ரூபாய் 72 பைசா,
- மைசூர் - நான்கு ரூபாய் ஐந்து பைசா,
- ஓசூர் - மூன்று ரூபாய் 70 பைசா,
- மும்பை - நான்கு ரூபாய் 25 பைசா,
- பெங்களூரு - நான்கு ரூபாய் ஐந்து பைசா,
- கொல்கத்தா - நான்கு ரூபாய் 27 பைசா,
- டெல்லி - மூன்று ரூபாய் 53 பைசா
இவ்வாறுக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை கோழி விலை ஒன்றிற்கு 84 ரூபாயும் கறிக்கோழி விலை ஒன்றிற்கு 103 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.