நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான ஒப்பந்தப் புள்ளி கோரல் பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.