நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை பகுதியில் எஸ்எஸ்எம் என்ற க்ளீனிக் வைத்திருப்பவர் ஆனந்த். இவர் திமுக மேற்கு மாவட்டத்தின் மருத்துவரணி அமைப்பாளராகவும் செயல்பட்டுவந்தார். நேற்று மாலை தனது சொந்த ஊரான பரமத்தி வேலூர் அடுத்த செங்கப்பள்ளியில் இருக்கும் தனது பண்ணை வீட்டு தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த திமுக பிரமுகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு! - நாமக்கல்
நாமக்கல்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகரின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து உறவினர்கள் பரமத்தி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட திமுக பிரமுகர் ஆனந்தின் உடல் இன்று சேலத்தைச் சேர்ந்த தடயவியல் பேராசிரியர் கோகுலரமணன் தலைமையிலான குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரது தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.