நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக இருப்பவர் டாக்டர் ஆனந்த். இவர் சொந்தமாக ENT ஹெல்த் கிளீனிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! - டாக்டர் ஆனந்த்
நாமக்கல்: மாவட்ட திமுக பிரமுகர் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
doctor Anand
இந்நிலையில் செங்கப்பள்ளியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு தோட்டத்தில் பணியாற்றிய பணியாட்கள் வந்து பார்க்கையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து பரமத்தி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.