சுயமரியாதை சூரியன் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவம்பர் 12) நடைபெற்றது. இந்த நூலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதை, தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
'மக்கள் வேல் கொடு என்று கேட்கவில்லை, வேலை கொடு என்று கேட்கிறார்கள்' - சுப. வீரபாண்டியன் - நூல் வெளியீட்டு விழா
நாமக்கல்: மக்கள் வேல் கொடு என்று கேட்கவில்லை, வேலை கொடு என்றுதான் கேட்கிறார்கள் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப. வீரபாண்டியன், "மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்காமல் வேல் யாத்திரை நடத்துவது சரிதானா?, மக்கள் வேல் கொடு என்று கேட்கவில்லை! வேலை கொடு என்று தான் கேட்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு குழு கூறியதற்கு பல்கலைக்கழகம் இணங்குகிறது என்றால், கல்விச் சுதந்திரம் கூட இல்லை என்பதை காட்டுவதாகவும், இன்றைக்கு எதையும் யாரும் எழுதக் கூடாது, தாங்கள் செல்வதை தான் எழுத வேண்டும், தாங்கள் சொல்கிற மொழியை தான் பேச வேண்டும் என்ற சர்வதிகார போக்கு நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.