தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் வாக்காளர்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு பரப்புரை! - VOTERS

நாமக்கல்: உழவர் சந்தையில் 100 விழுக்காடு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது

நாமக்கல்

By

Published : Mar 31, 2019, 3:18 PM IST

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர்.

நாமக்கல்

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை பொதுமக்களுக்கு 100 விழுக்காடு வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. உழவர் சந்தையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில் நாமக்கல் உதவி ஆட்சியர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில், தனியார் கல்லூரி மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். அப்போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details