தமிழ்நாடு முழுவதும் உள்ள 16,500 ஊராட்சிகளில் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டார்.
அப்போது முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கூறினார். மேலும், தனது குடும்ப வறுமை சூழல் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.