நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. இதில், 100க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தங்கி பணி செய்துவந்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளால் கட்டுமான வேலைகள் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை கரோனா தடுப்பு நடவடிக்கை மண்டல சிறப்பு குழு அலுவலர்களான, ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் வழங்கினர்.