நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் உள்ள கூடுதல் அரசு கட்டட வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்றூ திங்கட்கிழமை என்பதால் மாற்றுத்திறனாளிகள் பலர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள் வழங்கக் கோரி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் யாரையும் அலுவலத்திற்குள் அனுமதிக்காமல் மனுக்களை பெறப்பட்டது. இதில் மனு அளிக்க வந்த பலரிடம் மனுக்களை வாங்காமல் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜான்சி மற்றும் அலுவலர்கள், 'மாற்றுத்திறனாளிகளை இங்கு எதுக்கு வருகிறீர்கள், வாரந்தோறும் பேப்பரை தூக்கி கொண்டு வந்து விடுகிறீர்கள். இங்கிருந்து வெளியே செல்லுங்கள்' என கூறி அனைவரையும் விரட்டி அடிக்கும் காட்சி அங்கு வந்தவர்களையும், அப்பகுதியில் இருந்தவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.