நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - CASTE
நாமக்கல்: தாழ்த்தப்பட்டோர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் அருகே ஈச்சங்காடு பகுதியில் ரம்யா என்ற பெண் தாக்குதலுக்கு உள்ளானார். இதேபோல் மெட்டாலா பகுதியில் யுவராஜ் என்ற தலித் இளைஞர் தாக்கப்பட்டார். செருக்கலை மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சிவஞானம் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.