தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு பூ தாண்டும் திருவிழா - namakkal district news

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு பூ தாண்டும் திருவிழா ஊனங்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

மாடு பூ தாண்டும் திருவிழா
மாடு பூ தாண்டும் திருவிழா

By

Published : Jan 17, 2021, 1:10 PM IST

நாமக்கல் மாவட்டம் ஊனங்கல்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, மாடு பூ தாண்டும் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குறிப்பிட்ட சமூக மக்கள், தங்களது குல தெய்வமான வீரகாரன் சுவாமி கோயிலுக்கு காளைகளை நேர்ந்து விடுகின்றனர். இந்த காளைகள் ஊர் மக்கள் பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றன.

மாடு பூ தாண்டும் திருவிழா

பொங்கல் பண்டிகையின்போது இந்த காளைகள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் கோயிலின் குறுக்கே அமைக்கப்பட்ட பூக்களால் ஆன கோட்டை குறிப்பிட்ட நேரத்தில் காளைகள் தாண்டுகின்றன. இந்தாண்டு நடைபெற்ற மாடு பூ தாண்டும் போட்டியில் சின்னபெத்தம்பட்டி ஊர் காளை வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:பொங்கல் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details