நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மண்டல சிறப்பு குழு அலுவலர்களான ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மளிகை, காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், “மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் நோய் தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.