தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது! - நாமக்கல் காவல் துறை

நாமக்கல்: கோழிகளுக்கு கொரோனோ வைரஸ் தாக்கியுள்ளதாகவும், கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் எனவும் சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பிய கரூரைச் சேர்ந்த நபரை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.

வதந்தியை கிழப்பியர் கைது செய்த காவல் துறை
வதந்தியை கிழப்பியர் கைது செய்த காவல் துறை

By

Published : Mar 11, 2020, 3:38 PM IST

சீனாவில் கொரோனோ வைரஸ் பரவி, பலரும் உயிரிழந்த நிலையில் உலக அளவில் கொரோனோ பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள, உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழிகளுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளது என்பதை மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் கோழிக்கறி, முட்டைகளை சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் கடந்த மாதம் பரவியது.

இதனால் முட்டை, கோழிக்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, விலையும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள், சம்மேளன செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

இது குறித்து நாமக்கல் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பியது தெரியவந்தது.

சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட செய்தி

இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது ஐ.பி.சி.505 (பி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் செய்த தவறை ஏற்றுக் கொண்டு, அதற்கு மறுப்பான செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில், அவரை சொந்த பிணையில் காவல் துறையினர் விடுவித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்

இது குறித்து நாமக்கல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்!

ABOUT THE AUTHOR

...view details