நாமக்கல் மாவட்டத்தில் அண்மை காலமாக கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுவீச்சில் செய்து வருகிறது.

அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பரப்புரை வாகனம் மூலம் கரோனா நோய்த்தொற்று குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களை பிடித்து இந்த விழிப்புணர்வு குறும்படத்தை பார்க்கச் செய்து கரோனா குறித்து அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!