தமிழகத்தில் வருகின்ற 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போராடி வந்த குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளருக்கு தேர்தல் ஆணையும் அளித்துள்ளது.
சுயேச்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்
நாமக்கல்: குக்கர் சின்னத்தை பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சின்னத்தை சுமந்தவாறே வாக்கு கேட்கும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி பதிவு செய்தால் மட்டுமே விரும்பிய சின்னத்தை அளிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அவரது கோரிக்கையை நிராகரித்து பரிசுபெட்டி சின்னத்தை வழங்கியது. இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர் சுயேச்சை வேட்பாளர் சக்திவேல். இவர் சக்தி அறக்கட்டளை என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியுள்ளது.
இவர் தற்போது டிடிவி.தினகரன் பாணியில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதால் குக்கரை சுமந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வெற்றிப்பெற்றார். அதே போல் சுயேச்சை வேட்பாளர் சக்திவேலும் தன்னுடன் எப்போதும் குக்கர் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.