நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஐந்து பேரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.
வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற சினிமா தயாரிப்பாளர் உள்பட 5பேர் கைது - சினிமா தயாரிப்பாளர்
நாமக்கல்: ராசிபுரம் அருகே சினிமா எடுக்க பணமில்லாததால் வீடுகளில் திருட முயற்சித்த சினிமா தயாரிப்பாளர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
theft
அதில், சென்னையச் சேர்ந்த ரவி, கண்ணண், தானேஸ்வரன், வழக்கறிஞர் பிரதீப்சரண், தேனியைச் சேர்ந்த பட தயாரிப்பாளர் பாண்டியன் என்பதும், சினிமா எடுக்க பணம் இல்லாததால் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் ஐந்துபேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து கார், ஆயுதங்கள், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கறிஞர் பிரதீப்சரண் மீது திருச்சி காவல்நிலையத்தில் கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.