நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு இன்று ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'இலங்கையைச் சேர்ந்த குமாரசாமி, பரிமளாதேவி தம்பதியினர் 2014ஆம் ஆண்டு தங்களுக்கு குழந்தை இல்லை என்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளனர்.
அப்போது, தாராபுரம் பாலாஜி சூர்யா மருத்துவமனை உடந்தையுடன் பரிமளாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக பொய்யாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்களுடன் நடந்த பேரத்தின் முடிவில், இலங்கை தம்பதிக்கு 2014 பிப்ரவரி 24 பெண் குழந்தை பிறந்ததாகவும், அதற்கு பாலாஜி சூர்யா மருத்துவமனையின் மருத்துவர் லோக நாயகி சான்றிதழ் அளித்ததாகவும் கூறி வேறு தம்பதிக்கு பிறந்த குழந்தையுடன் அத்தம்பதி இலங்கை சென்றுவிட்டது.