தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு - நாமக்கல்

நாமக்கல்

By

Published : Apr 26, 2019, 10:12 AM IST

Updated : Apr 26, 2019, 10:37 AM IST

2019-04-26 10:09:59

நாமக்கல்: குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்ய பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா கடந்த 30 வருடங்களாக குழந்தைகளை விற்பனை செய்துவந்துள்ளார். இதில் ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக செவிலியர் அமுதாவிடம் ஒரு தம்பதி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தரகர் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாமக்கல்-ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆய்வு செய்யவும், ராசிபுரம் நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறந்த 4,800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கப்பதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் அறிவித்துள்ளார்.

Last Updated : Apr 26, 2019, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details