ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலி அமுதவள்ளி. இவர் தனது கணவர் ரவிச்சந்திரன் உட்பட பலருடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தொடர்பான ஆடியோ, ஏப்.25ஆம் தேதி, வெளியாகி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக செவிலி அமுதா உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, காவல்துறையினரிடம் இருந்து ஏப். 29ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்படி, சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் பத்து பேர் கொண்ட விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.