நாமக்கல்: ராசிபுரம் அருகே உள்ள நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது 2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காரை ஓட்டுனர் பின்பக்கம் செலுத்தினார்.
சிசிடிவி: நாமக்கல்லில் குழந்தை மீது ஏறிய கார் - child
நாமக்கல்லில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது எதிர்பாராத விதமாக கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
அதே வேளையில் குழந்தை காரின் பின்புறம் சென்றதால், சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது