தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை வழக்கு: பிணை மனு தள்ளுபடி!

court

By

Published : May 22, 2019, 11:29 AM IST

Updated : May 22, 2019, 1:26 PM IST

2019-05-22 11:28:23

நாமக்கல்: இராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சிக்கிய அமுதவல்லி உள்ளிட்ட 7 பேரின் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாமக்கல் இராசிபுரம் பகுதியில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருதாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ பதிவில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த குழந்தை விற்பனை தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி தமிழ்நாட்டையே உழுக்கியது.இந்த வழக்கு தொடர்புடையாதகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் லீலா,பர்வீன், சாந்தி,அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார்,ரேகா,அருள்சாமி,பானு ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அமுதவல்லி உள்ளிட்ட ஏழு பேரும் பிணை கேட்டு தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு முன்னரும் ஜாமீன் கோட்ட அவர்கள் தொடுத்த வழக்கை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்திருந்தது, இதையடுத்து இரண்டாவது முறையாக அவர்கள் தாக்கல் செய்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : May 22, 2019, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details