நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் 338 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளின் நிலை, தரம் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் ஆய்வு - கரோனா சிறப்பு சிகிச்சை மையம்
நாமக்கல்: 338 கோடி ரூபாய் மதிப்பில் நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள், 200 படுக்கை வசதிகளுடன் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
Chief Minister inspected construction work of the new Medical College at Namakkal
இதைத் தொடர்ந்து நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளையும் முதலமைச்சர் பழனிசாமி நட்டு வைத்தார்.