தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்ந்து கிடுகிடுவென உயரும் கோழிக்கறி விலை - Chicken rate

நாமக்கல்: கரோனா அச்சம் காரணமாக குறைந்திருந்த கோழிக்கறியின் விலை தற்போது கடந்த சில நாள்களாக தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகிறது.

Chicken
Chicken

By

Published : May 21, 2020, 1:13 PM IST

கரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதிமுதல் கோழிக்கறியின் விலை தொடர்ந்து குறைந்துவந்ததால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இழப்பைச் சந்தித்துவந்தனர்.

இந்நிலையில், கறிக்கோழியின் விலை கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 14ஆம் தேதி உயிருடன் ஒரு கிலோ கோழி 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

19ஆம் தேதி கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.130-க்கு விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் இரண்டு ரூபாய் உயர்ந்து உயிருடன் கோழி கிலோ 132 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ”தமிழ்நாடு, கேரளாவில் கோழிக்கறி தேவை அதிகமாக ஏற்பட்டதால், விலை வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில நாள்களுக்குப் பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது” என்றார்.

தற்போது கோழிக்கறி மூலம் கரோனா பரவாது என்ற அச்சம் மக்களிடமிருந்து நீங்கிய நிலையில், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.230 முதல் ரூ. 270 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ 3.55 காசுகளாக உள்ளது.

இதையும் படிங்க:கோழிக்கறிக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? - விளக்குகிறார் குழந்தைசாமி

ABOUT THE AUTHOR

...view details