நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், இருச்சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப மின்னம்பள்ளியை சேர்ந்த பிரியங்கா என்பவர் குழந்தையுடன் வந்துள்ளார். பெட்ரோல் நிரப்பிவிட்டு அவர் சாலையை கடக்கும் போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த இளைஞர் திடீரென பிரியங்காவின் 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஓடியுள்ளான். இதில், நிலை தடுமாறி குழந்தையுடன் பிரியங்கா கீழே விழுந்தார்.
குழந்தையுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு... விரட்டிப் பிடித்த பொதுமக்கள்! - நகை பறித்த இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்
நாமக்கல்: இருச்சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை துரத்தி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
குழந்தை
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், இளைஞரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேந்தமங்கலம் காவல் துறையினர், செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கனி என்பதும், இவர்கள் 5 பேர் கூட்டாக இணைந்து தனியாக செல்லும் பெண்களிடம் திருட்டில் ஈடுபடுவதையும் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.