தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் 'டைவ்' அடிக்கும் இளைஞர்கள் - விபரீதம் அறியாமல் வித்தை காட்டிய இளைஞர்கள்

காவிரி ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் டைவ் அடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காவிரி ஆற்று வெள்ளத்தில் விபரீதம் அறியாமல் வித்தை காட்டிய இளைஞர்கள்
காவிரி ஆற்று வெள்ளத்தில் விபரீதம் அறியாமல் வித்தை காட்டிய இளைஞர்கள்

By

Published : Jul 18, 2022, 7:26 PM IST

Updated : Jul 20, 2022, 3:09 PM IST

நாமக்கல்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் 1 லட்சத்து 33 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பழைய பாலத்தின் மீது நின்று ஆபத்தை உணராமல் ஆற்றில் குதிக்கும் இளைஞர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆற்றில் குதித்து நீண்ட தூரம் வெள்ளத்தில் அடித்து சென்று இளைஞர்கள் கரை சேரும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழக்கூடும், இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாலத்தின் மீது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் டைவ் அடிக்கும் இளைஞர்கள்

இதையும் படிங்க:முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையின் ரம்மியமான புகைப்படத்தொகுப்பு!

Last Updated : Jul 20, 2022, 3:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details