நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த நவணி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த லாரியின் மீது சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்ட காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.