கோழிப்பண்ணைத் தொழிலைப் போல் நாமக்கல் மாவட்டத்தில் லாரி பாடி கட்டும் தொழிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இங்கு லாரிகளின் பாடியை கட்டிச்செல்கின்றனர். இங்கு கட்டுமானம் செய்யப்படும் லாரியானது உலகத்தரம் வாய்ந்ததாக கருத்தப்படும் நிலையில், இக்கட்டுமான வேலையை வட மாநிலத்தவர்கள் பலரும் மேற்கொள்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி வேண்டும்:
இந்நிலையில் 'பட்ஜெட் 2019-20' இல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்துகொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வாங்கிலி, லாரி உரிமையாளர்களின் வருமானத்தொகை அதிகப்படியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வருமானவரி பெருமளவில் விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு லாரி உரிமையாளர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றார்.
மேலும் அவர், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களை மத்திய அரசு ஜி.எஸ்.டிக்குள் உட்படுத்தவேண்டும் எனவும், அவ்வாறு செய்வதினால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.