தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென மாயமான சிறுவன் - தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு! - நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்

நாமக்கல் : பரமத்திவேலூர் அருகே திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதால் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு
தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு

By

Published : Oct 24, 2020, 10:19 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கீழ்பாலபட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வடிவேல், இவரது மனைவி இந்துமதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வடிவேல் வேலைக்கு சென்றதால், நாளை(அக்.25) ஆயுதபூஜையொட்டி வாழை மரங்களை வெட்டி விற்பனை செய்வதற்காக இந்துமதி தனது மூத்த மகன் நிஷாந்த்தை (4) அழைத்துக்கொண்டு குப்புச்சிபாளையம் திருமணிமுத்தாற்று அருகே உள்ள வாழைதோப்பிற்கு சென்றுள்ளார்.

அங்கு மகன் நிஷாந்த்தை ஆற்றங்கரையோரம் நிறுத்தி வைத்து விட்டு வாழை மரங்களை வெட்ட தோப்பிற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது ஆற்றாங்கரையோரமாக இருந்த மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த இந்துமதி ஆற்றிலும், ஆற்றாங்கரையோரத்தில் இருந்த கிணற்றிலும் பார்த்து கதறியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆறு, கிணற்றில் பார்த்தும் சிறுவன் நிஷாந்த் கிடைக்கவில்லை.

திடீரென மாயமான சிறுவன்

இது குறித்து வேலாயுதபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாயமான சிறுவன் நிஷாந்த் ஆற்றில் முழ்கியிருப்பானா ? அல்லது வேறு எங்காவது சென்றானா? எனத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details