நாமக்கல் பூங்கா சாலையில் பாஜகவின் வேல் யாத்திரை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணை தலைவர்கள் அண்ணாமலை, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "அடுத்த ஏழு மாதம் மிக முக்கியமான காலகட்டம். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி தொண்டர்கள் விழித்திருந்து களப்பணியாற்ற வேண்டும்" என்றார்.
நாமக்கல்லில் வேல் யாத்திரையில் பங்கேற்ற பாஜவினர் கைது...!
நாமக்கல்: தமிழ்நாட்டில் இனி "Go Back Modi" அரசியல் எடுபடாது என்று பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதற்கு முன்
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தமிழ்நாட்டில் இனி "Go Back Modi" அரசியல் எடுபடாது, "Go Back Modi" அரசியல் செய்யவும் விடமாட்டோம், இது பிரதமரை அவமானப்படுத்தும் செயல். இதற்கு எங்களது பதிலடி பலமாக இருக்கும்" என தெரிவித்தார்.
அதன் பிறகு பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகிறார். கூட்டணி குறித்து பேச இன்னும் நாட்கள் உள்ளது. அமித்ஷா ரஜினிகாந்தை சந்திப்பது குறித்து எந்த திட்டமும் இல்லை, தவறு செய்தவர்கள் தான் வேல் யாத்திரையை கண்டு அஞ்சுகின்றனர்" என்றார்.