நாமக்கல்லில் மிகவும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. சித்தர்கள் பலர் கொல்லிமலையில் வாழ்ந்துவருவதாக இங்குள்ள பொதுமக்களால் நம்பப்படுகிறது.
இங்குள்ள மூலிகைகள் பல தீராத நோய்களுக்கு அருமருந்தாக விளங்குவதால் கொல்லிமலை "மூலிகைகளின் அரசி" என்று பெயர் பெற்றது.
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், நாமக்கல்லில் கடந்த சில வாரங்களாக வெப்பம் 100 டிகிரிக்கும் மேல் உள்ளது. இதனால் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கொல்லிமலை ஆகிய பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
இதனால், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பரவிவருகிறது. இங்குள்ள மரங்கள் காய்ந்து சருகாக மாறிவிட்டது. இதன் காரணமாக மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது உராய்வின் காரணமாக காட்டுத் தீ எளிதில் பரவுகிறது.
இதில், அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின்றன. இதனால், மலை பாதையில் வாகன ஓட்டிகள் புகையின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். விரைவில் காட்டுத் தீயை கட்டுக்குகள் கொண்டுவருவதன் மூலம் அரிய வகை மூலிகைகளைக் காக்க முடியும் என்கின்றனர் கொல்லிமலைவாசிகள்.