நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2011, 2016 என 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக சார்பில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர், இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 26 இடங்களில் காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யதுள்ளனர். மேலும் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 315% சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் உள்ள வீடு, அலுவலகம், அவருக்கு நெருங்கிய நண்பரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான மயில்சுதந்திரம், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், நல்லிபாளையம் விஜி, கேபிள் டிவி உரிமையாளர் லோகேஷ்வரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - முன்னாள் எம்எல்ஏ வீட்டின் முன் குவியும் அதிமுகவினர் மேலும் மதுரை மற்றும் திருப்பூரில் தலா ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பாஸ்கரின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சி - நகர மன்ற தலைவருடன் திமுகவினர் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு!!