உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்கள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றில் மக்கள் அதிகம் கூடாமல் இருக்க மார்ச் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா எதிரொலி: ஆஞ்சநேயர் கோயில் மூடல் - கரோனா அப்டேட்
நாமக்கல்: கரோனா காரணமாக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
temple
இதனையடுத்து நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் வழக்கமான பூஜைகள், அபிஷேகங்கள் மட்டும் வழக்கம்போல நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.