உலகம் முழுவதும் இன்று மேதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் நாமக்கலில் அனைத்து தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
தொழிலாளர்கள் மது குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்- திமுக மாவட்ட பொறுப்பாளர் வேண்டுகோள் - all-labours
நாமக்கல்: தொழிலாளர்கள் அனைவரும் மதுப்பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன்
தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் மது பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் மதுப்பழக்கத்தினால் தொழிலாளர்கள் அன்றாடம் உழைக்கும் வருவாயை மதுக்கே செலவிடும் அவலம் நிலவி வருகிறது. இதனால் உங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் மதுபழக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.