நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த கந்தம்பாளையம் அருகேயுள்ள கூடச்சேரி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (21). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சந்தோஷ்குமார் கடந்த ஒரு வருடமாக அதேப் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியான சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமியின் தாயார் அச்சிறுமியைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜன.,30ஆம் தேதி சந்தோஷ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் சிறுமியின் தாயார் நல்லூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சந்தோஷ்குமாரைத் தேடி வந்தனர்.