தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2023, 8:39 PM IST

Updated : Jun 25, 2023, 6:25 AM IST

ETV Bharat / state

திடீர் ஓட்டுநர் அவதாரம் எடுத்த பெண்கள்: மின்சார வாகனத்துடன் மல்லுக்கட்டியதால் விபரீதம்

நாமக்கல்லில் குப்பை சேகரிக்கும் மின்சார வாகனங்களின் துவக்க விழாவில், பயிற்சி அளிக்காமல் பெண்களை ஓட்டுநராக்கியதால் விபத்துகள் ஏற்பட்டன.

Etv Bharat
Etv Bharat

திடீர் ஓட்டுநர் அவதாரம் எடுத்த பெண்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குப்பை சேகரிப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். அப்போது சிவியம்பாளையம், கோனூர், ராசம்பாளையம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள பயனாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் இ-வாகனம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வாகனங்களை எடுத்துச்செல்லும் நிகழ்ச்சியை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர். அப்போது அங்கிருந்து இ-வாகனத்தை எடுத்து புறப்பட்ட பெண் ஒருவர் தட்டுத்தடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அதனைத்தொடர்ந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதினார்.

தொடர்ந்து ஒரு வழியாக வண்டியை நிறுத்திய அவர், 'நான் தான் சொன்னேனே.. எனக்கு ஓட்டத் தெரியாது' என்ற தொனியில் இறங்கி அமைதியாக வந்துள்ளார். சற்று நேரத்தில் கலவர பூமியாக காட்சியளித்த இடத்தில் சுற்றி உள்ளவர்கள், ’என்னடா நடக்குது இங்கனு’ யோசிப்பதற்கு முன்பு இந்த விபரீத விளையாட்டு முடிந்து விட்டது. அந்த பெண் வாகனத்தை எடுத்து ஓட்டிச்செல்லும்போது, பின்னால் ஒருவர் பாதுகாப்பிற்காக ஓடிய நிலையிலும் அவரால் இந்த விபத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரைத் தொடர்ந்து மற்றொரு பெண் மின்சார வாகனத்தை எடுத்துக்கொண்டு நடு ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக மாஸ் drive செய்துள்ளார்.

இதையும் படிங்க:டோல் பிளாசா ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர்.. வெளியான சிசிடிவி காட்சி

தலைக்கு தில்ல பாத்தியானு பின்னால் வந்த வாகனங்கள் முட்டியும் மோதாமலும் நின்றதால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரு வழியாக அந்தப் பெண் அந்த வாகனத்தை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு போதும்டா சாமி என இறங்கிவிட்டார்.

இதற்கு இடையே முதலில் இ வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த பெண் ஒருவர் தனது இரு சக்கர வாகனம் சேதம் அடைந்து விட்டதாகவும் அதை உடனடியாக சரி செய்துதர வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.

சம்பவம் நமக்குள்ளேயே இருக்கட்டும் கடுகளவு வெளிய கசிஞ்சா கூட என்று நினைத்தாரோ என்னவோ உடனே அந்த வாகனத்தை சரி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இத்தனைக்கும் ஒரே காரணம் பெண் துப்புறவு பணியாளர்களுக்கு இ வாகனத்தை இயக்குவதற்கான பயிற்சி கொடுக்காததுதான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பவே இப்படினா இவங்களை நம்பி சாலையில் எப்படி நடமாடுவது என அப்பகுதி பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் 100 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

Last Updated : Jun 25, 2023, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details