ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக இஸ்ரோ சார்பில் நடைபெற்ற விண்வெளி கண்காட்சி இன்று நிறைவுபெற்றது.
இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கண்காட்சியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
'கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற, இக்கண்காட்சியை மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதில் 300 மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வினாவிடை தேர்வு நடத்தப்பட்டது.
அதில் வெற்றிபெற்ற முதல் இரண்டு மாணவிகள், பிரதமருடன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவப்படும் பொழுது நேரில் சென்று பார்க்க போகிறார்கள். மேலும், 200 அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க:
இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவி