நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருந்துவந்தது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்தத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.